அனைத்து இ-சேவை மையங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இ-சேவை மையங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும்: மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களை மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொது மக்களுக்கு இ-சேவை மையங்கள் மூலம் விரைவாக சான்றிதழ் கிடைப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com