இன்ஸ்டாகிராமில் பழக்கம்: காதலை ஏற்க மறுத்த வாலிபர்... பிளஸ் 2 மாணவி எடுத்த விபரீத முடிவு

மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

திருவண்ணாமலை,

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய வாலிபர் காதலை ஏற்காததால் பிளஸ் 2 மாணவி தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிளஸ் 2 மாணவி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் நீண்ட நேரமாக செல்போனை பார்த்து கொண்டிருந்ததால், அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி, வீட்டை விட்டு வெளியே சென்றார்.

தீக்குளிப்பு

பின்னர் நகராட்சி பூங்காவுக்கு சென்று, தான் கொண்டு சென்ற மண்எண்ணெய்யை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் அலறி துடித்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காதலை ஏற்காததால்...

இந்த சம்பவம் குறித்து வந்தவாசி போலீசார் நடத்திய விசாரணையில், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த வாலிபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் மாணவி, அந்த வாலிபரை காதலிக்க தொடங்கியுள்ளார். இதுகுறித்து மாணவி கூறியபோது, நான் வேறொரு பெண்ணை காதலிக்கிறேன். அதனால் உனது காதலை ஏற்க முடியாது என அந்த வாலிபர் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி தீக்குளித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X