தமிழகத்தில் மின் விநியோகம் தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் மின் விநியோகத்தை தடையின்றி வழங்குவதில் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில்  மின் விநியோகம் தடையின்றி வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
Published on

சென்னை,

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருவதன் காரணமாக பொது மக்களிடம் மாற்றுவழி பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி தேவை, கையிருப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட வேண்டும். சிலிண்டர்கள் தட்டுப்பாட்டின் காரணமாக ஹோட்டல்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் மின் அடுப்பு உபயோகிக்க பட்டுவருவதால், தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com