அறநிலையத்துறை ஆணையருக்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு இடைக்காலத்தடை - ஐகோர்ட் உத்தரவு

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அறநிலையத்துறை ஆணையருக்கு தனி நீதிபதி விதித்த அபராதத்திற்கு இடைக்காலத்தடை - ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை,

சென்னை சூளை சொக்கவேல் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள் நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு உத்தரவை அமல்படுத்தாதது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.

தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து, மேல்முறையீட்டு வழக்கை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com