உலக செவிலியர் தினம் - வானதி சீனிவாசன் வாழ்த்து

நோயுற்றோரை விரைவில் மீண்டு எழச் செய்வதில் செவிலியர்களின் பங்கு உன்னதமானது.
உலக செவிலியர் தினம் - வானதி சீனிவாசன் வாழ்த்து
Published on

கோவை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

உயிரைக் காக்கும் பணியில் கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக விளங்கும் செவிலியர்களுக்கு உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்.

நோயுற்றோரின் பிணிகளைத் தீர்ப்பதில் உங்களின் பணியும், கனிவும், சேவையும் அவர்களை விரைவில் மீண்டு எழச் செய்வதில் தங்களின் பங்கு உன்னதமானது. செவிலியர்களின் உன்னத சேவைகளுக்கு மனமார்ந்த நன்றிகளும், வாழ்த்துகளும்..

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com