வீடுகளுக்கு மாதம் ரூ.200க்கு இணைய சேவை: பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

திமுக ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு மாதம் ரூ.200க்கு இணைய சேவை: பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வீடுகளுக்கு கேபிள் டிவி சேவைபோல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை ஏற்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும். இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ் அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் முதற்படியாக இதுவரை ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதிகொடுக்கப்பட்டுள்ளது. 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்ற விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு அரசு அலுவலகங்களுக்கு செல்லாமல் இ-சேவை மையம் மூலம் 1.2 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின் 25,000 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com