நூலகத்திலும் முறைகேடு: வச்சது புத்தகமும் இல்ல..! எழுதியது வரலாறும் இல்ல..! - வானதி சீனிவாசன்

இன்னும் எத்தனை லட்சம் போலி புத்தங்கள் பரவியுள்ளது என்று நினைத்துப் பார்க்கவே இதயம் கனக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 வானதி சீனிவாசன்
Published on: 

சென்னை,

கொடிய நோயைக் காட்டிலும் கொடூரமான இதுபோன்ற முறைகேடுகளால் வரலாறு திரிக்கப்படுகிறது, உண்மைகள் மறைக்கப்படுகிறது, கற்பவர் மனதில் தவறான தகவல்கள் பதியப்படுகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

போலி புத்தகங்கள்

இது தொடர்பாக, பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கோவை பெரியார் அறிவுலகத்தினைத் தொடர்ந்து தற்போது தென்காசி மாவட்ட மைய நூலகத்திலும் ரூ. 21 லட்சம் மதிப்பிலான 2200 அகல்விளக்கு பதிப்பக போலி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களை ஆராய்ந்து தணிக்கை செய்து பார்த்தால் இன்னும் எத்தனை லட்சம் போலி புத்தங்கள் பரவியுள்ளது என்று நினைத்துப் பார்க்கவே இதயம் கனக்கிறது.

வெட்கித் தலைகுனிந்திருக்கிறது நூலகங்கள்

கொடிய நோயைக் காட்டிலும் கொடூரமான இதுபோன்ற முறைகேடுகளால் வரலாறு திரிக்கப்படுகிறது, உண்மைகள் மறைக்கப்படுகிறது, கற்பவர் மனதில் தவறான தகவல்கள் பதியப்படுகிறது.

அகல் விளக்கால் அறிவுச்சுடர் ஏற்ற வேண்டிய நூலகங்கள் இன்று அதே அகல்விளக்கால் தனது மாண்பினை இழந்து மவுனத்துடன் நிற்கிறது. முன்பு இருந்த மவுனத்தில் அறிவின் வாசம் வீசியது. இப்போது உள்ள மவுனத்தில் இப்படி குப்பைகளை என்னிடம் வந்து சேர்த்துவிட்டார்களே என்று வெட்கித் தலைகுனிந்திருக்கிறது நூலகங்கள்.

வச்சது புத்தகமும் இல்ல..! எழுதியது வரலாறும் இல்ல..!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X