

சென்னை,
திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அரசு நில ஆவணங்களைத் திருத்தி, சொத்துகளை அபகரிக்க முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளி சசிகுமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவாரூர் எண்- 1 இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஆவணங்களை, சசிகுமார் என்பவர். திருவாரூர் சார்பதிவாளர் அலுவலக பணியாளர்கள் மற்றும் சில தனிநபர்களுடன் கூட்டுச்சதி செய்து அழித்தும், அவற்றில் முறைகேடாக திருத்தங்கள் மேற்கொண்டும். பட்டா மாறுதல் மற்றும் சட்ட விரோதமாக பயன்படுத்துதல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக, திருவாரூர் மாவட்ட பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 21.08.2026 அன்று திருவாரூர் சி.பி.சி.ஐ.டி குற்ற எண். 01/2026. சட்டப்பிரிவுகள் 420, 120(B), 465. 466,467, 468 & 471 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு. புலன்விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் புலன்விசாரணையில், சசிகுமார். திருவாரூர் சார்பதிவாளர் அலுவலக பணியாளர்கள். கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சில தனிநபர்களுடன் கூட்டுச்சதி செய்து, திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த அரசு ஆவணங்களை அழித்தும். விருத்தாசலம் குமாரதேவர் மடம். திருவாரூர் தெட்சிணாமூர்த்தி மடத்திற்கு சொந்தமான சொத்துக்கள். சில கோயில் நிலங்கள் மற்றும் அடியக்கமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் நிலங்கள் ஆகியவற்றின் சர்வே எண்களை. சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள புத்தகம் எண்.1 மற்றும் புத்தகம் எண்.3 ஆகியவற்றில் முறைகேடாக திருத்தம் செய்தும். மேற்படி சொத்துக்களை மோசடியாக அபகரித்து விற்பனை செய்யும் நோக்கில் செயல்பட்டதும் கண்டறியப்பட்டது.
மேலும், ஆவணங்களில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த விவரங்களை அழித்துவிட்டு, அவற்றிற்கு பதிலாக போலியான விவரங்களை பதிவு செய்து. குறிப்பிட்ட சில சர்வே எண்களுக்கு சட்டவிரோதமாக பட்டா பெற்றதுடன். மேற்படி சொத்துக்களை தொடர்ந்து விற்பனை செய்திருப்பதும் புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து, தீவிரத்தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான சசிகுமார் என்பவர். கடந்த 03.11.2026 அன்று கைது செய்யப்பட்டார். பின்னர். அவர் திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கண்டறிந்து. குற்றச் செயலில் அவர்களது பிணை உறுதிப்படுத்தி, கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீவிர புலன்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.