

கோவை,
கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசியதாவது;
தமிழகத்தில் புதிய சட்டமன்றக் கட்டிடம் என்பது தற்போதைய காலகட்டத்திற்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. கர்நாடகாவில் கட்டப்பட்ட சட்டமன்றம் வரலாறு படைத்து வருவதைப் போலத் தமிழகத்திற்கும் புதிய சட்டமன்றம் தேவை. எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் நோக்கம். அதன் அடிப்படையில்தான் ஒரு பெண் உறுப்பினருக்கும், ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவருக்கும் மாற்று சபாநாயகராக அமர்ந்து அவயை வழிநடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. என்றார்.
அப்போது முதல்-அமைச்சர் விஜய் பிரதமர் வேட்பாளரா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செங்கோட்டையன் பேசியதாவது;
”எங்கள் தலைவரை (முதல்வர் விஜய்) பொறுத்தவரை தெளிவாக இருக்கிறார். இந்த தமிழகம் அவரை நம்பி வாக்களித்துள்ளது. தமிழ்நாடு மக்களை காப்பதற்காக, அவர் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள்.” என்று அவர் கூறினார்.