கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறுகிறதா தமிழகம்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

தொடரும் கடத்தல் சம்பவங்களுக்கு முதல்-அமைச்சர் உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி
Published on: 

சென்னை,

கடத்தல்காரர்களின் புகலிடமாக மாறுகிறதா தமிழகம்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

12 பேர் மாயம்

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 7 இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போனதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்த முயன்றதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை அன்றாட நிகழ்வாக நம்மால் கடந்துவிட முடியாது.

பதவி விலக வேண்டும்

தமிழக வரலாறு இதுவரை கண்டிராத தொடர் கடத்தல் சம்பவங்கள் தவெக ஆட்சியில் பெருகிக் கொண்டிருப்பது ஆபத்தான அறிகுறியாகத் தான் தெரிகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் கீழ் இயங்கும் அரசு இயந்திரத்தின் ஏதோவொரு மூலையில் பெரிய ஓட்டை இருப்பதையே தமிழகத்தில் தொடரும் வன்முறைக் குற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன. காரணம், கடந்த 6 மாதங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 300-க்கும் அதிகமான வன்முறைக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதனால், தவெக அரசின் காவல்துறையும் உளவுத்துறையும் தங்களது வீரியத்தை இழந்து, வெறும் விளம்பர துறையாக மாறிவிட்டனரோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜோசப் விஜய்யின் திறனின்மைக்கு நமது வீட்டு பிள்ளைகளின் பாதுகாப்பை நாம் இனியும் அடகு வைக்க முடியாது!

எனவே, தமிழகத்தில் தொடரும் கடத்தல் சம்பவங்களுக்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! இல்லையேல் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X