தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை கைகழுவி விட நினைக்கிறதா தவெக அரசு? - நயினார் நாகேந்திரன் கேள்வி

கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு பல்வேறு பிரச்சினைகளுடன் இழுபறியாக நீடித்து கொண்டிருக்கிறது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை கைகழுவி விட நினைக்கிறதா தவெக அரசு? - நயினார் நாகேந்திரன் கேள்வி
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீட்டை கைகழுவி விட நினைக்கிறதா தவெக அரசு? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

தவெக அரசின் நிர்வாக குளறுபடி

காவிரி தொழில்நுட்பக் குழுவின் துணை தலைவர் பதவி கடந்த ஜூன் மாதம் முதல் காலியாக இருப்பதாகவும், தகுதியான மூத்த தலைமை பொறியாளர்களில் ஒருவரை அப்பதவியில் நியமிப்பதற்காக அரசாணை வெளியாகி 17 நாட்கள் கடந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் வெளியாகியுள்ள தகவல் தவெக அரசின் நிர்வாக குளறுபடிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் (CWMA) அறிவுறுத்தியும் கூட, கர்நாடக காங்கிரஸ் தண்ணீர் தர மறுக்கிறது. மேலும், தமிழகத்தின் நீராதாரத்தை கெடுக்கும் வகையில் மேகதாது அணை கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கிறது. அதுமட்டுமன்றி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு பல்வேறு பிரச்சினைகளுடன் இழுபறியாக நீடித்து கொண்டிருக்கிறது.

ஏற்புடையதல்ல

இப்படியான இக்கட்டான சூழ்நிலையில், காவிரி நதிநீர் குறித்து தொழில்நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளை வழங்கும் காவிரி தொழில்நுட்பக் குழுவினை அதிகாரிகள் இன்றி இப்படி அரைகுறையாக இயக்குவது ஏற்புடையதல்ல. மாநிலத்தின் நீர் மேலாண்மையையும், பாசன தேவையையும் கண்காணிக்கக் கூடிய இக்குழு, அதிகாரிகள் இன்றி பலவீனமடைந்தால், தமிழகத்தின் விவசாய பெருமக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும்.

வலியுறுத்தல்

எனவே, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றின் ஆலோசனை கூட்டங்களில் தமிழகத்தின் குரலாக ஒலிக்க கூடிய காவிரி தொழில்நுட்பக் குழுவில் காலியாக உள்ள துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் உடனடியாக நிரப்ப வேண்டுமென முதல்-அமைச்சர் தவெக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com