தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

தவெக ஆட்சியில், காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா? - நயினார் நாகேந்திரன் கேள்வி
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சட்டம்-ஒழுங்கு

மதுரை பெருங்குடியில் உளவுத்துறை தலைமைக் காவலர் ராஜா மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டதை அப்பட்டமாகக் காட்டுகிறது. சந்தேகத்திற்கிடமான நபர்களை விசாரித்த ஒரே காரணத்திற்காக, 16 தையல்கள் போடும் அளவிற்கு காவலர் ஒருவரையே கற்களாலும் ஆயுதங்களாலும் தாக்க வன்முறையாளர்கள் துணிந்துள்ளனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில், காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறது.

தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது, வெறும் திரைக்கவர்ச்சியையும் விளம்பர அரசியலையும் மட்டுமே நம்பி தமிழகத்தில் ஆட்சி நடத்திவிடலாம் என்று ஜோசப் விஜய் அரசு பகற்கனவு காண்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

பாதுகாப்பை உறுதி செய்யக

காவலர் ராஜா மீது தாக்குதல் நடத்திய போதை வன்முறைக் கும்பலை உடனடியாகக் கைது செய்து மிகக் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் சிறையில் அடைப்பதோடு, இனியாவது விழித்துக்கொண்டு தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com