சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை துவங்க இன்னும் நல்ல நேரம் வரவில்லையா முதல்-அமைச்சரே..? - வானதி சீனிவாசன்

காலம் தாழ்த்தி செயல்படுத்தப்படும் எந்த திட்டமும் அதற்குரிய பலனை தராது என்பதை முதல்-அமைச்சர் உணரவேண்டும்.
வானதி சீனிவாசன்
Published on

சென்னை,

தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

திருச்சியில் 14 வயது சிறுமி வாடகை கார் ஓட்டுநரால் மது ஊற்றிக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகப் பெண்கள் இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இதுபோன்ற கயவர்கள் பிடியில் சிக்கி சீரழிவது? முதல்-அமைச்சர் அவர்களே சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை ஆரம்பிப்பதற்கு இன்னுமா நல்ல நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை

தமிழகத்தில் தினந்தோறும் பெண்கள் படும்பாட்டை நீங்கள் அறிந்திருந்தும் அவர்களின் பாதுகாப்பிற்காக உங்கள் நடவடிக்கையை உடனடியாக தொடங்கியிருக்க வேண்டாமா? காலம் தாழ்த்தி செயல்படுத்தப்படும் எந்த ஒவ்வொரு திட்டமும் அதற்குரிய பலனைத் தராது என்பதை முதல்-அமைச்சர் உணரவேண்டும். எனவே விரைவில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படையை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com