

சென்னை,
முன்னாள் சபாநாயகர் அப்பாவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
நேரு பிறந்த நவம்பர் 14 அன்று தமிழக அரசால் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கேக்கில் நேருவின் படம் இல்லாமல் விளம்பரத்திற்கு உங்கள் படம் போட்டு கொடுத்திருக்கிறீர்களே! நினைவிருக்கிறதா?. ஊரான் வீட்டு நெய்யில் உங்கள் ஸடீக்கர் ஓட்டலாமா முதல்-அமைச்சர் விஜய்?.
தமிழ்நாட்டு மாணவ மாணவிகளுக்கு உங்கள் படம் போட்ட கேக் முக்கியமல்ல உங்கள் கட்சிக்காரார்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விஜய் படமில்லாமல் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பீர்களா முதல்-அமைச்சர் விஜய்?
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தில் மாணவர் சைக்கிள் ஒன்றிற்கு ரூ.7,235 மாணவி சைக்கிள் ஒன்றிற்கு ரூ.7,476 என்றும் கொள்முதல் செய்ய 3 நிறுவனங்களுக்கு "நள்ளிரவு" கொள்முதல் உத்தரவு பிறப்பித்தது நினைவிருக்கிறதா முதல்-அமைச்சர் விஜய்?.
தற்போது கோட்டையில் அதிகாரிகளோடு அமர்ந்து அதே சைக்கிள் கொள்முதல் செய்ய ரூ5,130, ரூ5,260 என விலை குறைய காரணம் என்ன ? அன்று 115 கோடி ரூபாய் அதிக விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிட்டது ஊழல் தானே?. ஊழல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தூய ஆட்சி முன் வருமா?. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.