எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியினருடன் கூட்டு வைத்தது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - செங்கோட்டையன்

முதல்வர் விஜய் நல்லாட்சி நடத்துவார் என செங்கோட்டையன் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியினருடன் கூட்டு வைத்தது வெட்ட வெளிச்சமாகிவிட்டது - செங்கோட்டையன்
Published on

சென்னை,

கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

முதல்வர் விஜய் நல்லாட்சி நடத்துவார், எல்லோரையும் அரவணைப்பார், அவர் பின்னாலே நாம் அணிவகுப்போம் என்று சேருகின்றனர். கோவையில் அதிமுகவினர் எத்தனை பேர் தவெகவில் இணைகின்றனர் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அப்போதுதான் தெரியும்.

ஆட்சி அமைக்க 118 பேர் வேண்டும் கவர்னர் சொன்ன உடனேயே அதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்துக் கொண்டு இருக்கிற நேரத்தில் திமுகவை இணைத்து, அதிமுகவில் முதல்வராக வரலாம் என்று இபிஎஸ் முயற்சியை மேற்கொண்டது உண்மை. உலகம் தெரிந்த ஒன்று. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியினருடன் கூட்டு வைத்திருந்தது தற்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. அதன் விளைவாகத் தான் தவெகவில் சேருகின்றனர். இன்னும் பலபேர் வருவார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com