தமிழகத்தின் மேலும் 6 ஈரநிலங்களுக்கு 'ராம்சர்' சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி

தமிழகத்தின் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ‘ராம்சர்' சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
தமிழகத்தின் மேலும் 6 ஈரநிலங்களுக்கு 'ராம்சர்' சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மேலும் 6 ஈரநிலங்கள் (கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம், வேம்பனூர், வெள்ளோடை பறவைகள் காப்பகம், வேடந்தாங்கல் பறவைகள் காப்பகம் மற்றும் உதயமார்த்தாண்டம் பறவைகள் காப்பகம்) தற்போது ராம்சர் ஈரநில அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவிலான இந்த அங்கீகாரம் பெருமைக்கு உரித்தானதோடு, தமிழ்நாடு அரசின் ஈரநிலங்கள் இயக்கத்துடன் நன்றாக பொருந்திப்போகிறது. இந்த சிறப்பான சாதனைக்காக தமிழ்நாடு வனத்துறைக்கு எனது பாராட்டுகள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com