சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமலேயே த.வெ.க. நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது - கனிமொழி எம்.பி.

யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமலேயே த.வெ.க. நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது - கனிமொழி எம்.பி.
Published on: 

சென்னை,

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமலேயே த.வெ.க. நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

த.வெ.க.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே த.வெ.க. நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. த.வெ.க. உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல!

திகில் திரைப்படம்

த.வெ.க. ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X