ஒடிசா தொழிலாளர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு

ராமேசுவரத்தில் மீனவ பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஒடிசா தொழிலாளர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு
Published on

ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் மீனவ பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கொலை

ராமேசுவரம் வடகாடு பகுதியில் இருந்து கடந்த 24-ந் தேதி பாசி சேகரித்து விட்டு வந்த மீனவ பெண்ணை அங்குள்ள இறால் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சிலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர்.

இதுகுறித்து இறந்து போன மீனவ பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராமேசுவரம் நகர் போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இறால் கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலாளர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை

இந்தநிலையில் ராமேசுவரத்தில் மீனவ பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் மட்டுமே ஈடுபட்டது தெரியவந்தது.

அதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணா ரஞ்சன், பிரகாஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து மீனவ பெண்ணை கட்டாயப்படுத்தி தூக்கிச்சென்று இறால் பண்ணையில் உள்ள மோட்டார் அறையில் வைத்து கற்பழித்து சேலையால் இறுக்கி கொலை செய்தனர். பின்னர் அந்த பெண் அணிந்திருந்த நகைகளை எடுத்து கொண்டு உடலை அந்த பகுதியில் உள்ள முட்புதரில் வீசினர்.

இதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் இந்த வழக்கில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணா ரஞ்சன், பிரகாஷ் ஆகிய 2 பேர் மீதும் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து நேற்று ராமேசுவரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

அப்போது நீதிபதி இளையராஜா, 2 தொழிலாளர்களையும் ஜூன் மாதம் 10-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் மீனவ பெண்ணை கற்பழித்து கொலை செய்த வடகாடு பகுதியில் உள்ள இறால் கம்பெனி, கடற்கரை, அந்த பெண்ணின் உடல் கிடந்த இடம் உள்ளிட்ட இடங்களில் டிரோன் கேமராவை பறக்கவிடப்பட்டு போலீசார் மூலம் வீடியோ பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com