கும்மிடிப்பூண்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு

கும்மிடிப்பூண்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை, பணம் திருட்டு
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தீனதாயாளன் நகரை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 55). ரியல் எஸ்டேட் அதிபர். இவர், கடந்த 18-ந்தேதி தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் நாகப்பட்டினம் சென்றார்.

நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு தனியறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com