சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
Published on: 

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று ரூ.200 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,625-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி மட்டும் கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com