வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆபரணங்கள் மெருகேற்றும் கற்கள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆபரணங்கள் மெருகேற்றும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெம்பக்கோட்டை அகழாய்வில் ஆபரணங்கள் மெருகேற்றும் கற்கள் கண்டெடுப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் இதுவரை 18 குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

இதில் ஏராளமான மண்பாண்ட பொருட்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், சங்கு வளையல்கள், தங்க ஆபரணம், உருவ பொம்மைகள், சதுரங்க ஆட்ட காய்கள், வட்ட சில்லுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் வெம்பக்கோட்டை அகழாய்வில் தற்போது உருண்டை வடிவ மெருகேற்றும் கற்கள் கிடைத்துள்ளன. மெருகேற்றும் கற்களை கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட்களை தயாரிக்கவும், மெருகேற்றவும் பயன்படுத்தி உள்ளனர் என அகழாய்வு இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com