சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை

இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி, ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.46,240க்கும், ஒரு கிராம் ரூ.5,780-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல, இந்த மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ச்சியாக விலையில் ஏற்ற இறக்கம் கண்ட வெள்ளி இன்று விலை மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com