

சென்னை,
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் ஜோலார்பேட்டை பணிமனையில் இன்று (செவ்வாய்கிழமை) மதியம் 2.10 மணி முதல் மாலை 4.10 மணி வரையில் (2 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பெங்களூருவில் இருந்து இன்று காலை 8.45 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை வரும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66550), சோமநாயக்கன்பட்டி-ஜோலார்பேட்டை இடையேயும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் பயணிகள் ரெயில் (66549), ஜோலார்பேட்டை-சோமநாயக்கன்பட்டி இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.