அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14-ந் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு 2 முறை தள்ளுபடி செய்தது.

இதைத்தொடர்ந்து, தன் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு பிறப்பிக்க உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com