உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ்.மோகன் காலமானார்

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் காலமானார்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ்.மோகன் காலமானார்
Published on

சென்னை,

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர் டாக்டர் எஸ்.மோகன். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

இந்தநிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் (90) இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com