சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு), நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம்
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து தனது நீதிபதி பதவியை தஹில்ரமானி ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் கடந்த 6ந்தேதி அவர் அனுப்பிவைத்தார்.

அவரது ராஜினாமா கடிதத்தினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்று கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நீதிபதி வினீத் கோத்தாரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com