களக்காடு: தோட்டத்தில் வாசல் கேட்டை திருடிய 2 பேர் கைது

களக்காடு பகுதியில் உள்ள தோட்டத்தின் வாசலில் இருந்த 30 கிலோ எடையுள்ள கேட்டை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு, இடையன்குளம், நடுத் தெருவை சேர்ந்த புரோலின் (வயது 34) என்பவருக்கு சொந்தமான தோட்டம் இடையன்குளத்தில் உள்ளது. அந்த தோட்டத்தின் வாசலில் சுமார் 30 கிலோ எடை கொண்ட கேட் போடப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் புரோலின் கடந்த 17ம்தேதி அந்த கேட்டை அடைத்து விட்டு சென்றவர், பின்பு மறுநாள் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது அந்த கேட்டைக் காணவில்லை.
இதுகுறித்து புரோலின் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் இடையன்குளம், தெற்கு தெருவை சேர்ந்த சாம்ரவி(32), களக்காடு, கீழ ஆதிச்சபேரியை சேர்ந்த ராஜாசிங்(33) ஆகிய 2 பேரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மேற்சொன்ன 2 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்து, அவர்களிடமிருந்து அந்த கேட்டை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.






