கள்ளக்குறிச்சி: கோழிப்பண்ணையில் தீ விபத்து- 4,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பண்ணைக்குள் இருந்த கோழிக் குஞ்சுகளால் வெளியேற முடியவில்லை.
கள்ளக்குறிச்சி: கோழிப்பண்ணையில் தீ விபத்து- 4,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு
கோழிப்பண்ணை
Published on: 

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, சுமார் 4,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்தன.

விபத்து நடந்தது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டம் விருகாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் அப்பகுதியில் சொந்தமாகக் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அந்த பண்ணையில் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இன்று (சன்க்கிழமை) பண்ணையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பற்றிய தீ, பண்ணை முழுவதும் மளமளவெனப் பரவியது.

ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கோழிகள் பலி

தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பண்ணைக்குள் இருந்த கோழிக் குஞ்சுகளால் வெளியேற முடியவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 4,500 கோழிக் குஞ்சுகள் பரிதாபமாகத் தீயில் கருகி உயிரிழந்தன. உயிரிழந்த கோழிகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2.50 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், அதற்குள் கோழிக் குஞ்சுகள் அனைத்தும் உயிரிழந்துவிட்டன. இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X