கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: புகார் வந்தது எப்போது ? டிஜிபி பதில்

நேற்று முன் தினம்தான் பெண் ஆட்சியர் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்று டிஜிபி தெரிவித்தார்.
டிஜிபி
Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த திரிசூலி சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கு முறையான புகார் வரவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் உத்தரவிட்டிருந்தார்.இந்த நிலையில், 2வது நாள் விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக காவல் துறை தரப்பில் சமர்பிக்கப்பட்டது, மேலும், ஆட்சியர் அளித்த புகாரில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரிடம் காவல்துறையினர் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அருள் விக்னேஷ் மீது பி.என்.எஸ் 75, 78, 79 உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவுக்கு எதிராக ஆட்சியர் முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். நேற்று முன் தினம்தான் பெண் ஆட்சியர் புகார் அளித்தார். உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணை நியாயமாக நடைபெறும். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ? அந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

X