கள்ளக்குறிச்சி வன்முறை: சமூக வளைத்தளங்களில் கருத்து - கரூரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி வன்முறை: சமூக வளைத்தளங்களில் கருத்து - கரூரை சேர்ந்த 4 இளைஞர்கள் கைது
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை வழக்கு தொடர்பாக, நேற்று போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவி படித்த தனியார் பள்ளி, வாகனங்கள் அனைத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

இந்த போராட்டத்தின் போது, கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 55 போலீசார் காயமடைந்தனர். அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நீடித்து வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் தொடர்பாக இன்று காலை வரை 329 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை சம்பவம் தொடர்பாக கரூரை சேர்ந்த 4 இளைஞர்களை இன்று கைது செய்துள்ளனர். வன்முறை குறித்து சமூக வளைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் போலீசார் 4 பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com