கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கள்ளழகர் வைகையில் எழுந்தருளல்: மதுரையில் போக்குவரத்து மாற்றம்
Published on

மதுரை,

மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இந்தநிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாநகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ராமராயர் மண்டபத்திற்கு செல்லும் வழியிலும், ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் புதுப்பாலம் வழியாக எந்த வாகனத் திற்கும் அனுமதி கிடையாது. ஓபுளா படித்துறை வைகை தென்கரை பகுதி மற்றும் வைகை வடகரைகளில் கார் மற்றும் இதர வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை.

தென்பகுதியில் இருந்து எந்த வாகனமும் ஏ.வி.பாலம் மற்றும் செல்லூர் புதுப்பாலம் வழியாக வைகை வடபகுதிக்கு வர அனுமதி இல்லை. புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டில் இருந்து கீழ வாசல், சிம்மக்கல் மார்க்கமாக செல்ல வேண்டிய மாநகர பஸ்கள், கனரக வாகனங்கள், ரேஸ்கோர்ஸ் ரோடு, நத்தம் ரோடு சந்திப்பு, பாண்டி யன் ஓட்டல் சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு. நீதிமன்றம், கே.கே.நகர் ஆர்ச், கே.கே.நகர் ரோடு ஆவின் சந்திப்பு. அரவிந்த் மருத்துவமனை சந்திப்பு, குருவிக்காரன் சாலை, கணேஷ் தியேட்டர் சந்திப்பு, காமராஜர் சாலை, முனிச்சாலை சந்திப்பு, பழைய குயவர்பாளையம் ரோடு, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, தெற்குவெளி வீதி வழியாக செல்ல வேண்டும்.

பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புது நத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு மற்றும் மேலூர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் கட்டபொம்மன் சிலை, தெற்கு மாரட் வீதி, மகால் ரோடு, கீழவாசல் சந்திப்பு, காமராஜர் சாலை, முனிச்சாலை, குருவிக்காரன் சாலை, அரவிந்த் மருத்துவமனை, ஆவின் சந்திப்பு, கே.கே.நகர் ரோடு, மேலூர் 120 அடி ரோடு வழியாக செல்ல வேண்டும்.

தத்தனேரி ரோட்டில் இருந்து புதுநத்தம் ரோடு, அழகர்கோவில் ரோடு, மேலூர் ரோட்டிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் எல்.ஐ.சி. சந்திப்பு. குலமங்கலம் ரோடு, செல்லூர் 60 அடி ரோடு, பி.டி.ராஜன் ரோடு வழியாக செல்ல வேண்டும்.

கள்ளழகரை எதிர்சேவையின்போது தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை, கோகலே ரோடு, திருமுக்கு ளம் ரோடு, அப்துல் பழைய அக்ரஹாரம் தெரு, கபார்கான் தெரு, லாலா லஜபதிராய் ரோடு, செவன்த்டே ஸ்கூல் மைதானம், அல் அமீன் பள்ளி வளாகம், அல் அமீன் பள்ளி மைதானம், எல்.பி.என். பள்ளி மைதானம், ஐ.டி.ஐ. மைதானம், புதூர் சேத்தனா பள்ளி மைதானம், ஒய்.எம்.சி.ஏ. பள்ளி மைதானம், மேரியான் பள்ளி மைதானம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதிக்கப்படும்.

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களை, காந்தி மியூசியம் மைதானம், டாக்டர் தங்கராஜ் சாலை, ரோஸ்கோர்ஸ் மைதானம், எம்.கே. யுனிவர் சிட்டி மைதானம், யுனிவர்சிட்டி மாலை நேர கல்லூரி மைதானம், சாய் ராம் பள்ளி, பொதுப்பணித்துறை அலுவலகம், தமுக்கம் மைதான வாகன நிறுத்தம், வடக்கு மாசி வீதி மற்றும் கீழமாசி வீதி ஆகிய இடங்கள் மற் றும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். நகருக்குள் கீழவெளி வீதியில் அம்சவள்ளி சந்திப்பு முதல் கீழவாசல் வரையிலும், கீழமாசி வீதியில் தேரடி முதல் விளக்குத்தூண் வரையிலும் வடக்கு மாசி வீதியிலும் வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.

அம்சவள்ளி சந்திப்பிலிருந்து அண்ணாசிலை சந்திப்பு வரை அனுமதி சீட்டு உள்ள வாகனங்களை தவிர வேறு எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை. அவுட் போஸ்ட் முதல் கோரிப்பாளையம் வரை, அண்ணா பஸ் நிலைய கோரிப்பாளையம் வரை மற்றும் பாலம் ஸ்டேசன் ரோடு கபடி ரவுண்டானா கோரிப்பாளையம் வரை எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை.

இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com