செங்கல்பட்டில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்

செங்கல்பட்டில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டில் காமராஜர் பிறந்தநாள் கொண்டாட்டம்
Published on

முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-ம் ஆண்டு பிறந்தநாள் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதுபோல செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் பாஸ்கர் தலைமையில் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காமராஜர் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியினர், 2024 வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசுக்கு எதிராக அனைத்து எதிர் கட்சியினரும் ஒன்றிணைய வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com