

சென்னை,
கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா தனது ‘நமது மக்கள் முன்னேற்றக் கழகம்’ கட்சியினை த.வெ.க.வுடன் இணைத்தார். அதன்படி நமது மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சுமார் 3 ஆயிரம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பனையூர் தலைமை அலுவலகத்தில், நடைபெற்ற கட்சி இணைப்பு விழாவில் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தங்களை த.வெ.க.வில் இணைத்து கொண்டனர்.