காஞ்சிபுரம்: ரோடு ரோலா ஏறி இறங்கியதில் வடமாநில இளைஞர் உடல்நசுங்கி பலி

மேற்குவங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தை சோந்தவா பிக்கிபிஷ்வால்
காஞ்சிபுரம்: ரோடு ரோலா ஏறி இறங்கியதில் வடமாநில இளைஞர் உடல்நசுங்கி பலி
Published on

மேற்குவங்கள மாநிலம் மால்டா மாவட்டத்தை சேந்தவா பிக்கிபிஷ்வால்(21). இவா காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாசத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளா.

இந்நிலையில், பிக்கிபிஷ்வால் நேற்று பணியின் போது உணவருந்திய பின் ஒய்வெடுப்பதற்காக அங்கு நிறுத்தப்பட்டிருந்த ரோடுரோலரின் கீழே படுத்து தூங்கியுள்ளா.

இதை கவனிக்காத ரோடுரோலா டிரைவர் ரோடுரோலரை இயக்கியபோது பிக்கிபிஸ்வால் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் பிக்கிபிஷ்வால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தா.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சுங்குவாசத்திரம் போலீசார் விரைந்து வந்து பிக்கிபிஷ்வாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா.

X

Daily Thanthi
www.dailythanthi.com