

தூத்துக்குடி,
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி திருச்செந்தூர்-நெல்லை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் நின்று செல்லும் இடங்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ் வான சூரசம்ஹாரம் வருகிற 15-ந் தேதி மாலை நடக்கிறது. இதில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த பக்தர்களின் வசதிக்காக 15-ந் தேதி திருச்செந்தூர் - நெல்லை இடையே இரண்டு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே இயக்குகிறது.
அதன்படி வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3.20 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் (06001), மாலை 5 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.மறு மார்க்கத்தில் இரவு 7:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06002), 8:50 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் சென்றடை யும். மற்றொரு சிறப்பு ரெயில் (06004), இரவு 9:30 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு இரவு 10:45 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் சென்றடையும். மறு மார்க்கத்தில் இரவு 11:30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் (06003), நள்ளிரவு 12:45 மணிக்கு திருச்செந்தூர் வந்தடையும்.இந்த ரெயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லுார், பாளையங்கோட்டை ஆகிய ரெயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்கள் 10 பொதுப் பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப் படும்.இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.