

தூத்துக்குடி,
கந்த சஷ்டி திருவிழாவினையொட்டி, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சம்மந்தமான முக்கிய அறிவிப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா இந்த ஆண்டு 10.11.2026 முதல் 15.11.2026 வரையில் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 15.11.2026 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறுகிறது. 16.11.2026 அன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறும்.
இத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாட்களான 14.11.2026 & 15.11.2026 ஆகிய நாட்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்கதர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மழை அதிகமாக இருக்கும் பட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
14.11.2026 மற்றும் 15.11.2026 ஆகிய நாட்களில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
அதே போன்று மேற்கண்ட தினங்களில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரி, மணப்பாடிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும், கன்னியாகுமரி, உவரி, திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக தூத்துக்குடி, ராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) பாதையை தவிர்த்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் மாற்று பாதையில் செல்லவும்.
1. பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள் (Diversion Rout)
1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி, மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரபட்டிணம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி DCE Jn, திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ Jn, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும். அல்லது ஆறுமுகநேரி பஜார், மூலக்கரை, அம்மன்புரம் ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி/உடன்குடி வழியாக செல்லவும். அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி/உடன்குடி வழியாக செல்லவும்.
2. குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரபட்டிணம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ Jn, ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி, உடன்குடி வழியாக செல்லவும்.
3. கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரபட்டிணம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ Jn, வழியாக செல்லவும்.
4. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் ‘V’ Jn, வழியாக திருநெல்வேலிஃதூத்துக்குடி செல்லவும்.
II . அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்.
1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ITI வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்pல் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். மழை அதிகமாக இருக்கும்பட்சத்தில் ITI வளாகத்தில் பேருந்து நிறுத்த முடியாத சூழ்நிலையில் பகத்சிங் பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு திரும்பி செல்லும் போது திருச்செந்தூர் குறிஞ்சிநகர், பிரசாத்நகர், சண்முகபுரம் ரயில்வே கேட் வழியாக செல்லவும்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அருகில் செல்ல சுற்றுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (Circular/ Shuttle Bus) மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம், GH Back Side, மெயின் ஆர்ச் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் செல்லவும்.
2. திருநெல்வேலி, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலி ரோட்டில் உள்ள ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (Circular/ Shuttle Bus) மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில், முருகாமடம், GH Back Side, வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவும்.
3. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் மற்றும் கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையிலுள்ள FCI குடோனுக்கு மேற்கு பகுதியில் (சர்வோதயா அருகில்) அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (Circular/ Shuttle Bus) முருகாமடம், GH Back Side, மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவும்.
III. திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனகள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள்.
பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலை, திருநெல்வேலி சாலை மற்றும் பரமன்குறிச்சி சாலையில் அதிக அளவிலான வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழை அதிகமாக இருக்கும்பட்சத்தில் அவசரகால வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் (Parking) ஏனோ, தானோவென்று வாகனங்களை நிறுத்தாமல், காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக நிறுத்த வேண்டும்.
1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி சாலை மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தூத்துக்குடி சாலையில் உள்ள ராஜ்கண்ணா நகர் வழியாக துது.நகர் வாகன நிறுத்தம், ஆதித்தனார் கல்லூரி மாணவர் விடுதி எதிரே உள்ள வாகன நிறுத்தம், அரசு தொழிற் பயிற்சி பள்ளி (ITI) எதிர்புறம் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும், திரும்பிச் செல்லும் போது வீரபாண்டியபட்டிணம், காயல்பட்டிணம் தாயம்பள்ளி, காயல்பட்டிணம் பேருந்து நிலையம், காயல்பட்டிணம் ICICI பேங்க் Corner ஆறுமுகநேரி Costal Check Post வழியாக செல்லவும். மேலும் மழை அதிகமாக பெய்யும் பட்சத்தில் வீரபாண்டியபட்டிணம் - காயல்பட்டிணம் சாலையில் Wisdom பள்ளி எதிரே உள்ள மைதானத்தில் அவசரகால வாகன நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2. திருநெல்வேலி, குரும்பூர் சாலை மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
திருநெல்வேலி, குரும்பூர் சாலை மார்க்கமாக திருவிழாவிற்குவரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருநெல்வேலி சாலையில் உள்ள வியாபாரிகள் சங்க வாகன நிறுத்தம் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்), அன்புநகர் வாகன நிறுத்தம், ஆதித்தனார் கல்லூரி பணியாளர் குடியிருப்பு வாகன நிறுத்தம் மற்றும் கிருஷ்ணாநகரில் உள்ள Ideal Town மற்றும் செந்தூர்நகர் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும். திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
3. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோன் அருகில் உள்ள முருகன் Land வாகன நிறுத்தம், சுந்தர் Land வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும். திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
4. கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் சாலை மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து பரமன்குறிச்சி சாலையில் வலதுபுறம் திரும்பி FCI குடோன் அருகில் உள்ள முருகன் Land வாகன நிறுத்தம், சுந்தர் Land வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும். திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
IV) பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்லும் வழி
JJ நகர் பார்க்கிங் (தூத்துக்குடி ரோடு) & TB ரோடு வழியாக வரும் பக்தர்கள், தாலுகா அலுவலகம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம், மினிசிவமுருகன் லாட்ஜ் ஜங்ஷன் (நாடார் தெரு), சன்னதி தெரு (சுபா மெடிக்கல் ஜங்ஷன்), சன்னதி தெரு (புளியடி சந்தனமாரியம்மன் கோவில் ஜங்ஷன்), புளியடியம்மன் கோவில் தெரு, சபாபதி பிள்ளையார் கோவில் (நவாப்பழ சாலை), நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.
மாட்டுத்தாவணி வாகன நிறுத்தம், TB ரோடு ஐடியல் பார்க்கிங் வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் இருந்து நடந்து வரும் பக்தர்கள் TB ரோடு, மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், கோவில் வடக்கு பகுதிக்கு சென்று மேற்கு கிரிபிரகாரம், தெற்கு கிரிபிரகாரம் வழியாக கடற்கரை பகுதிக்கு இடவசதிக்கேற்ப போதுமான எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களில் கூட்டம் அதிகமாகும்பட்சத்தில் மாற்றுப்பாதையில் கோவில் மற்றும் கடற்கரை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
தூத்துக்குடி ரோடு வழியாக வரும் பக்தர்கள், பகத்சிங் பேருந்து நிலையம், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.
திருநெல்வேலி ரோடு வழியாக வரும் பக்தர்கள், மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.
பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு வழியாக வரும் பக்தர்கள், முருகாமடம் (தெப்பகுளம்), முத்தாரம்மன்கோவில் தெரு ஜங்ஷன், தெற்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், நவாப்பழ சாலை வழியாக நாழிக்கிணறு மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும்.
பக்தர்களின் வசதிக்காக அனைத்து முக்கிய இடங்களிலும் LED TV மூலம் சூரசம்காரம் காண்பதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
V) பக்தர்கள் வெளியே வரும் வழி
கோவில் வடக்கு பகுதியில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் வடக்கு ஆர்ச், மணி அய்யர் ஹோட்டல் ஜங்ஷன், TB ரோடு வழியாக JJ நகர் பார்க்கிங் அல்லது TB ரோடு மெயின் ஆர்ச் வழியாக தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு அல்லது பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு மற்றும் மற்றப் பகுதிகளுக்கு செல்லவும்.
கோவில் சன்னதி தெரு (கோவில் மத்திய பகுதி) வழியாக வெளியே வரும் பக்தர்கள் தேரடி (கீழக்கு ரதவீதி) வந்து கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, இரும்பு ஆர்ச், மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேவலி ரோடு செல்லலாம். அல்லது தேரடி (கிழக்கு ரதவீதி) கிழக்கு ரதவீதி, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வழியாக பரமன்குறிச்சி ரோடு மற்றும் குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும்.
கோவில் தெற்கு பகுதி (கடற்கரை, நாழிகிணறு) பகுதிகளில் இருந்து வெளியே வரும் பக்தர்கள் நவாப்பழ சாலை, அமலிநகர் ஜங்ஷன், தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன், முருகாமடம் (தெப்பகுளம்) வந்து பரமன்குறிச்சி ரோடு அல்லது குலசேகரபட்டிணம் ரோடு செல்லவும். அல்லது முத்தாரம்மன் கோவில் தெரு ஜங்ஷன் வந்து மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி இரும்பு ஆர்ச் ஜங்ஷன் வழியாக மெயின் ஆர்ச் வந்து தூத்துக்குடி ரோடு அல்லது திருநெல்வேலி ரோடு செல்லவும்.
கடற்கரை பகுதியில் கூட்டம் மிகஅதிகாமாக இருக்கும்பட்சத்தில் (தேவைப்படும்பட்சத்தில்) நாழிகிணறு பழைய பேருந்து நிலையம், முருகன் விடுதி, வள்ளியம்மை Quarters, வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை - முருகாமடம் அருகில்) செல்லவும். அல்லது கடற்கரை அய்யா கோவில், கமலா கார்டன், கிருஷ்ணா தியேட்டர், வீரராகவபுரம் தெரு, முத்தாரம்மன் கோவில் தெரு (யாதவர் தெரு) வழியாக குலசேகரபட்டிணம் ரோடு (எடிசன் மருத்துவமனை - முருகாமடம் அருகில்) செல்லவும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற காவல்துறை சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பக்தர்களும், பொதுமக்களும் காவல்துறைக்கு தகுந்த ஒத்துழைப்பு கொடுத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் மழை அதிகமாக பெய்யும்பட்சத்தில் காவல்துறை மேற்கொள்ளும் மாற்று ஏற்பாடுகளுக்கு பக்தர்களும், பொது மக்களும் ஒத்துழைப்பு தந்து உதவுமாறு கேட்டுக்கொள்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.