

சென்னை,
கந்தூரி விழாவையொட்டி விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விழுப்புரத்தில் இருந்து நவம்பர் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் (வண்டி எண் 06011) அதேநாள் மதியம் 1.05 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில், நாகப்பட்டினத்தில் இருந்து அதே நாள் (நவம்பர் 20) மதியம் 1.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரெயில் (06012) அன்று மாலை 5.30 மணிக்கு விழுப்புரத்தை சென்றடைகிறது.
8 பெட்டிகளை கொண்ட இந்த முன்பதிவில்லாத மெமு ரெயில், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேராளம், திருநள்ளாறு, காரைக்கால், நாகூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.