சிவகளையில் ரூ.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

சிவகளை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மிதிவண்டிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவகளை ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, சிவகளை ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் மிதிவண்டிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டப்பிடாரம் சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story






