கன்னியாகுமரி: பச்சிளம் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது

கன்னியாகுமரியில் பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில், பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கன்னியாகுமரி: பச்சிளம் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய நர்சிங் மாணவி காதலனுடன் கைது
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொற்றையடி அடுத்த கரம்பவிளை பகுதியில் உள்ள முட்புதர் ஒன்றில், பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றிற்குள் பச்சிளம் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அந்தப் பகுதியைச் சேர்ந்த ரெஜினா (வயது 20) என்ற நர்சிங் கல்லூரி மாணவியும், திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த முகேஷ்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலால் ரெஜினா கர்ப்பமடைந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே குழந்தை பிறந்ததால், சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சி 2 பேரும் சேர்ந்து குழந்தையைக் கொல்லத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே அதைக் கொன்று, ஒரு பக்கெட்டில் அடைத்து ஆள் நடமாட்டமற்ற முட்புதரில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து நர்சிங் மாணவி ரெஜினா மற்றும் அவரது காதலன் முகேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் தடையங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 2 பேரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறந்த சில மணி நேரத்திலேயே பச்சிளம் குழந்தை தாயாலேயே கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com