கராத்தே போட்டி தேர்வு

மதுரையில் வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளியின் சார்பாக மதுரை கே.எம்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் கராத்தே பெல்ட் போட்டி தேர்வு நடைபெற்றது
கராத்தே போட்டி தேர்வு
Published on

மதுரையில் வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளியின் சார்பாக மதுரை கே.எம்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் கராத்தே பெல்ட் போட்டி தேர்வு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட கலர் பெல்ட்டுகளை பெற்றனர்.

போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கே.எம்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி, பள்ளி முதல்வர் சரஸ்வதி, ஆலோசகர் சார்லஸ் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பெல்டினை வழங்கினர். போட்டி தேர்வை வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ராஜா செய்திருந்தார், நடுவர்களாக டெக்னிக்கல் டைரக்டர் வைரமணி, ராஜா ஆகியோர் செயல்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com