கார்த்திகை தீபத் திருவிழா: அகல் விளக்குகள் தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் மும்முரம்

200 விளக்குகள் கொண்ட ஒரு மூட்டை ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அகல் விளக்குகள்
Published on: 

எடப்பாடி,

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில் மற்றும் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இந்த விழாவையொட்டி களிமண்ணால் ஆன அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவதே சிறப்பாகும். ஆனால் நாகரீக மோகத் தில் ஒரு சிலர் பீங்கான் விளக்கு மற்றும் தீப வடிவிலான மெழுகுவர்த்திகளில் தீபம் ஏற்றுகி றார்கள். இருப்பினும் களிமண்ணால் செய்யப்படும் அகல் விளக்குகளுக்கு என்றைக்கும் மவு சுதான்.

இந்த நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அகல் விளக்குகளை சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரி கள் மொத்தமாக ஆர்டர் கொடுத்துள்ளனர். மேலும் சிறு வியாபாரிகளும் அகல் விளக்குகள் கேட்டு முன்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு குலாலர் தெரு மற்றும் மேல் சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.

அகல் விளக்கு

இப்பகுதியில் மழை பொழிவு இன்றி வறண்ட வானிலை தொடர்வதால் தொழிலாளர்கள் அகல் விளக்கும் தயாரிக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேல் சித்தூர் பகுதியை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி கோகிலா கூறியதாவது:-

இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண் பண்டங்கள், அகல் விளக்கு தயாரிக் கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 200 விளக்குகள் கொண்ட ஒரு மூட்டை ரூ.160 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கேரளா, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் அச்சு எந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் சந்தையில் அதிகம் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் கைவினை கலைஞர்களான எங்களது தயாரிப்புகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே இத்தொழிலை மீட்டெடுக்கும் வகையில் தமிழக அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அகல் விளக்குகளை அரசே தங்களிடம் நேரிடையாக கொள்முதல் செய்ய வேண்டும். மண்பாண்ட தொழிலுக்கான வண்டல் மண் எடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X