தாராபுரம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட கார்த்திகா கைது; மு.வீரபாண்டியன் கண்டனம்

கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகா உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
தாராபுரம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட கார்த்திகா கைது; மு.வீரபாண்டியன் கண்டனம்
மு.வீரபாண்டியன்
Published on: 

சென்னை,

தாராபுரம் இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட கார்த்திகாவை கைது செய்தது கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

போராட்டம்

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கார்த்திகா வேட்பாளராக களம் கண்டார். தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு காவல் துறை மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாக கூறி நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகாவும்,அவரது கட்சி நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள்.

கண்டனம்

அது தொடர்பாக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்காக, இன்று அதிகாலை கார்த்திகா உள்ளிட்டோரை காவல் துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

விடுவிக்க வேண்டும்

கைது செய்யப்பட்டுள்ள கார்த்திகா உள்ளிட்டோரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com