கருணாநிதி பிறந்தநாள் விழா

தென்காசியில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாள் விழா
Published on

தென்காசி:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சீனி துரை, அரசு வக்கீல் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி காந்தி சிலை அருகில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நகர தி.மு.க. சார்பில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கினர். நகராட்சி தலைவர் சாதிர், துணைத்தலைவர் சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com