கெங்கை அம்மன் திருவிழா

பசுமாத்தூர் கிராமத்தில் கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது.
கெங்கை அம்மன் திருவிழா
Published on

கே.வி.குப்பம் தாலுகா பசுமாத்தூர் கிராமத்தில் கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கெங்கை அம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அம்மன் உடலில் பொருத்தி கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது.

முன்னதாக பொன்னி அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கரக ஊர்வலம், சிலம்பாட்டம், கூழ்வார்த்தல், கும்பசோறு படைத்தல், வீதி உலா ஆகியவையும், இரவில் வாணவேடிக்கையும் நடைபெற்றன. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com