திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கியாஸ் ஏஜென்சி ஊழியர் பலி

திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கியாஸ் ஏஜென்சி ஊழியர் பலியானார்.
திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி கியாஸ் ஏஜென்சி ஊழியர் பலி
Published on

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவர், மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் ராஜாஜி நகருக்கு சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பினார்.

திருவொற்றியூர் அண்ணாமலை ரயில்வே கேட் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் சரவணன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com