ஓட்டல் உரிமையாளருக்கு அடி உதை

ஓசியில் டிபன் வாங்கிச்சென்றதை தட்டிக்கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு அடி உதை 3 பேர் மீது வழக்கு
ஓட்டல் உரிமையாளருக்கு அடி உதை
Published on

விழுப்புரம்

விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 44). இவர் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை விஜயன்(20) என்பவர் ரூ.130-க்கு டிபன் பார்சல் வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை அவர் கொடுக்கவில்லை. உடனே ஓட்டல் உரிமையாளர் செந்தில்குமார், விஜயனிடம் பணம் கேட்டதற்கு அவர் அங்கிருந்து பணம் கொடுக்காமல் சென்றதோடு தினேஷ்(20), பகத்(21) ஆகியோரை அந்த ஓட்டலுக்கு அழைத்து வந்து அவர்கள் 3 பேரும் சேர்ந்து செந்தில்குமாரையும், அவரது ஓட்டலில் வேலை செய்துவரும் சுரேந்தர் என்பவரையும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் விஜயன் உள்ளிட்ட 3 பேர் மீது விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com