பள்ளி மாணவி கடத்தல்

பள்ளி மாணவி கடத்தியது தொடாபாக போலீசா விசாரணை நடத்தி வருகின்றனா.
பள்ளி மாணவி கடத்தல்
Published on

திண்டிவனம் ஜக்காம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் அருண்குமார் (வயது 20). இவர் கூரியர் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் விழுப்புரம் அருகே பனங்குப்பத்தைச்சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய மாணவியை கடத்திச்சென்று விட்டார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற அருண்குமாரையும் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com