தி.மு.க. முதன்மை செயலாளராக கே.என். நேரு நியமனம்

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என். நேரு அக்கட்சியின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தி.மு.க. முதன்மை செயலாளராக கே.என். நேரு நியமனம்
Published on

சென்னை,

தி.மு.க.வின் திருச்சி மாவட்ட செயலாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கே.என். நேரு இருந்து வருகிறார். அவருக்கு அக்கட்சியில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி, டி.ஆர். பாலு வகித்து வந்த முதன்மை செயலாளர் பதவியில் அவர் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர். பாலு பொறுப்பு வகித்து வருகிறார். அதனால் நேருவுக்கு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது என தி.மு.க. வட்டார தகவல் தெரிவிக்கின்றது.

தி.மு.க. ஆட்சியில் கடந்த 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழக போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டவர். அவர் நான்கு முறை சட்டசபைக்கு தேர்வாகி உள்ளார். இவற்றில், லால்குடி தொகுதியில் இருந்து 2 முறையும், திருச்சி மேற்கு தொகுதியில் இருந்து 2 முறையும் சட்டசபை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com