கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவு: த.வெ.க. சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு

கொளத்தூர் எம்.எல்.ஏ. விஎஸ். பாபு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவு: த.வெ.க. சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
Published on: 

சென்னை,

கொளத்தூர் எம்.எல்.ஏ. விஎஸ். பாபு மறைவைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் 7 நாட்கள் ரத்து மற்றும் த.வெ.க. சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.

வி.எஸ்.பாபு

இதுதொடர்பாக த.வெ.க. தலைமை நிலையச் செயலக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

நிகழ்ச்சிகள் ரத்து

இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை முதல்-அமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X