கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
கொப்பரை தேங்காய் ஏலம்
Published on

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 78 விவசாயிகள் 527 மூட்டைகளில் கொப்பரையை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தனர். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொப்பரை தேங்காய்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்றது. தாராபுரம், காங்கேயம், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 9 வியாபாரிகள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர்.

இதில் 214 மூட்டை கொண்ட முதல் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 75 ரூபாய் 26 காசு முதல் 79 ரூபாய் வரை ஏலம் விடப்பட்டது. 313 மூட்டை கொண்ட 2-ம் ரக கொப்பரை கிலோ ஒன்றிற்கு 42 ரூபாய் 19 காசு முதல் 68 ரூபாய் 76 காசு வரை ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட 101 மூட்டைகள் வரத்து அதிகரித்துள்ளது. கிலோவிற்கு 2.08 காசுகள் விலை குறைந்துள்ளது. இதன் மதிப்பு ரூ.16 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. இந்த தகவலை ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில் முருகன் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com